cw2
உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த, முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்த போப் 16ம் பெனடிக்டிடின் உடல், 5 நாட்களாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று, ஜனவரி 5 ஆம் தேதி 16 மறைந்த போப்பின் இறுதி சடங்குகள் வாடிகனில் நடைபெற்றன.
போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டுக்கு அஞ்சலி செலுத்த உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்ற போப் 16-ம் பெனடிக்ட், ஜெர்மனியில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தார்.
ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறிய போப் 16, மறையும்போது அவரது வயது 95. போப்பாண்டவராக 8 ஆண்டு பதவி வகித்த 16-ம் பெனடிக்ட், தனது பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார்.
பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் வெளியான போது, அவர்களின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்ட மாண்பு கொண்ட பண்பாளர் 16-ம் பெனடிக்ட், ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார் 16-ம் பெனடிக்ட். இது தொடர்பாக பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும் இவரது தலைமை குறித்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.