கடந்த ஆண்டு முதலிடத்தை இழந்த Qantas மீண்டும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியாவின் Qantas விமானசேவை நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
400 சர்வதேச இணையத்தளங்களின் தரவுகளைத் தொகுத்து, ஆண்டுதோறும் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலை ஆன்லைன் தளமான AirlineRatings வெளியிடுகிறது.
விமானியின் பயிற்சி, விமானத்தின் வயது பாதுகாப்பு மற்றும் பொறியியல் சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தொகுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் அனுபவம் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்திலிருந்த Qantas, கடந்த ஆண்டுக்கான பட்டியலில் Air New Zealand-ஆல் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தநிலையில் தற்போது மீண்டும் முதலிடத்தைத் பிடித்துள்ளது.
Qantas அதன் 100 ஆண்டுகால வரலாற்றில், உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியாக இயக்கப்படும் விமான நிறுவனமாக, தனது செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பில் சாதனை படைத்துவருவதாக AirlineRatings சுட்டிக்காட்டியுள்ளது.
முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள்
AirlineRatingsஇன் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளது.
Qantas
Air New Zealand
Etihad Airways
Qatar Airways
Singapore Airlines
TAP Air
Portugal Emirates
Alaska Airlines
EVA Air Virgin
Australia/Atlantic
Cathay Pacific
Airways Hawaiian
Airlines SAS United
Airlines Lufthansa/Swiss Group
Finnair British
Airways KLM
American Airlines
Delta Air Lines