// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’

அமெரிக்காவில் புத்தாண்டு சோகமாகவே தொடங்கியிருக்கிறது. கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  நிலைமையின் தீவிரத்தை அணுகி, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் 'நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவும் மீட்பு முயற்சிகளுக்காகவும்'  அவசர நிலையை அறிவித்தார்.

கலிபோர்னியா 'மிருகத்தனமான' வானிலை நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு, புதன்கிழமை ஒரு பாம் சூறாவளி மேற்கு அமெரிக்க மாகணத்டைத் தாக்கியது.

சூறாவளி புயல் அப்பகுதியை மூழ்கடிக்கும் அளவில் பெருமழையைக் கொண்டு வந்தது, ஏற்கனவே புத்தாண்டு தினத்தன்று தொடர்ச்சியான புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், சாலைகளில் வெள்ளம் ஓடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சக்திவாய்ந்த காற்று வீசியது இது இன்னும் தொடரும் என்பதால் கவலைகள் அதிகரித்துள்ளன. புயல் அதன் உச்சத்தை எட்டுவதால், புதன் இரவு மற்றும் வியாழன் காலை எந்த விதமான அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு, மாகாண அதிகாரிகள் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

வெப்பநிலை ஜீரோ டிகிரிக்குக்கும் கீழே இருக்கும்போது, குளிர் மற்றும் வறண்ட காற்றுகள் மோதிக் கொள்வதால் ஏற்படும் புயல், பாம் சூறாவளி என்று சொல்லப்படுகிறது.  

பனிப்புயலால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், 100 ஆண்டுகளுக்கு ஏற்பட்டதைப் போன்ற மோசமான புயல், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது.
மாகாணத்தில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழு நடவடிக்கையையும் கண்காணிக்க சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு அவசரகால நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பதற்காக, குடியிருப்புவாசிகளுக்கு ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் வழங்கப்படுகின்றன.தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்ட நிலையில், இந்த நிலை தொடரும் என்பது கவலைகளை அதிகரித்துள்ளது.

வெர்மான்ட், ஓஹியோ, மிசோரி, விஸ்கான்சின், கன்சாஸ் மற்றும் கொலராடோ ஆகிய இடங்களில் வானிலையால் பலர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு புளோரிடாவில், வெப்பநிலை மிக வேகமாகக் குறைந்துள்ளதால், விலங்குகளின் நிலைமையும் மோசாமாகிவிட்டது, குளிரால் உறைந்து போன நிலையில், விலங்குகள் இறப்பதும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு வெப்பநிலை -50 டிகிரியை எட்டியது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்