cw2
உலகளவில் 7 நாட்களில் 29 லட்சம் புதிய கொரோனா வழக்குகளும், 24 மணி நேரத்தில் இந்தியாவில் 134 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளன.கடந்த ஏழு நாட்களில் ஒரு சில நாடுகளில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய அளவிலான அதிகரிப்புக் காணப்படுகிறது. புத்தாண்டுக்கு முன்னதாகவே சீனாவில் கொரோனா அதிகரித்து நிலைமை மோசமாக உள்ள நிலையில், உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.
சீனாவில், கடந்த ஏழு நாட்களில் 37,149 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் மற்றும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில், கடந்த ஏழு நாட்களில் 37,804 நோயாளிகளுக்கு கொரோனா பாசிடிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரு வாரத்தில் கோவிட் நோய்க்கு 372 பேர் பலியானார்கள்.
இருப்பினும், இந்தியாவில் பாதிப்பு அளவு கட்டுக்குள் உள்ளது. தற்போது, இந்தியாவில் 2,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 2,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், இதுவரை 4,41,45,667 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. நேற்று மட்டும், நாடு முழுவதும் 1.51 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் குணமடையும் விகிதம் தற்போது 98.8 சதவீதமாகவும், தினசரி தொற்று விகிதம் 0.09 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,769 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு, நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.11 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேசமயம், உலகளவில், கொரோனா பாதிப்பு பயமுறுத்துகிறது. கடந்த ஏழு நாட்களில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஏழு நாட்களில், 29,50,720 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 9,535ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,34,439 ஆக உள்ளது.