cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

2023 எப்படி இருக்கும்... பீதியை உண்டாக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்

பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன. தற்போது 2023ம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளும் வெளியாகியுள்ளது. பீதியை கிளப்பும் அந்த கணிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

2023 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. புத்தாண்டு குறித்து கடந்த காலங்களில் பல வகையான கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கணிப்புகளைச் செய்தவர்களில் ஒருவரான பிரான்சின் பிரபல ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே பல கணிப்புகளைச் செய்து அவை உண்மை என்று நிரூபித்தார். லெஸ் ப்ரொபிடீஸ் என்ற நாஸ்ட்ராடாமஸின் புத்தகம் 1555 இல் வெளியிடப்பட்டது. இந்நூலில் கூறப்பட்டுள்ள கணிப்புகள் இன்றைய தலைமுறையினரிடம் மிகவும் பிரபலம். நாஸ்ட்ராடாமஸின் இந்த புத்தகத்தில் மொத்தம் 942 கணிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன, அதில் படித்தவுடன் இதயம் நடுங்குவது போன்ற பல சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரிய அளவில் போர் மூளலாம்

உலகில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் இது 2023ம் ஆண்டில் உண்மையாகி விடுமோ என்ற அச்சத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. நோஸ்ட்ராடாமஸின் இந்த கணிப்பு உண்மையாகி விடும் போல் தோன்றுகிறது.

நெருப்பு மழை பெய்யும்

நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் வானத்திலிருந்து நெருப்பு மழை பொழிவதைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆண்டைப் பார்க்கும்போது, ​​​​இது ஒரு மோசமான அறிகுறியாக கருதப்படுகிறது. பைபிளில் கூட இந்த வகையானபேரழிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உலக முடிவின் அடையாளம் என்று சொல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதன் செவ்வாய் கிரகத்தை அடைவான்

நோஸ்ட்ராடாமஸ் தனது கணிப்புகளில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை அடைவதைப் பற்றியும் பேசியுள்ளார். ட்விட்டரின் புதிய தலைவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலோன் மஸ்க், வரும் 2029-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புவி  வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் காரணமாக, உலகின் பல நாடுகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. நாஸ்ட்ராடாமஸ் இதைப் பற்றியும் கணித்துள்ளார். பிரான்சின் ஜோதிடரின் கூற்றுப்படி, 2023ம் ஆண்டில் உலகம் முழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். இது தவிர கடலின் நீர்மட்டமும் அதிகரிக்கும். அதாவது, 2023ல், புவி வெப்பமடைதல் பிரச்சனை பெரிதாகும் என்று தெரிகிறது.

பொருளாதார நெருக்கடி

முதலில் கொரோனா தொற்றுநோய் மற்றும் பின்னர் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் உலகின் பொருளாதார நிலையை பெரிதும் பதித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரடைமயும் என நாஸ்ட்ராடாமஸ் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்