cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

மூளையை உண்ணும் அமீபா; தென் கொரியாவில் ஆரம்பமானது புதிய வைரஸ்

கொரோனாவின் தாக்கம் ஆட்டி படைத்து வந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் புதிதாக ஒரு நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 வயதான அந்த நபர் டிசம்பர் 10 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பியுள்ளார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டார்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளையை உண்ணும் அமீபா என்ற நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த மூளையை உண்ணும் அமீபா தொற்று தென்கொரியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி பலரது உயிரை பறித்தது.

இதற்காக பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால் உலகமே ஸ்தம்பித்து போனது.

பின்னர் இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, செலுத்தப்பட்டு படிப்படியாக குறைந்துகொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் அதன் தாக்கம் தொடங்கியுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், இந்தியா போன்ற நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த அச்சம் ஒரு பக்கம் இருக்க, தென் கொரிய நாட்டில் புதிய வகை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நெக்லேரியா ஃபௌலேரி” என்னும் “ மூளையை உண்ணும் அமீபா” என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்