cw2
அமெரிக்காவில் ஒரே திகதியில் பிறந்த தம்பதிக்கு அதே திகதியில் முதல் குழந்தை பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
இது 1,33,000 பேரில் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்டம் என சொல்லலாம்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஹன்ட்ஸ்வில்லேவைச் சேர்ந்த தம்பதியினர் Cassidy மற்றும் Dylan Scott இருவரும் ஒரே திகதியில் பிறந்தவர்கள் ஆவர். இப்போது அதே திகதியில் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
அதாவது இப்போது முழு குடும்பமும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்கிறது.
புதிதாகப் பிறந்த இந்த குழந்தை, பெற்றோர் இருவரும் பிறந்த அதே திகதியில் பிறந்து 1,33,000-க்கு 1 என்ற அதிசய நிகழ்வை கொண்டுள்ளது என்று அலபாமா மருத்துவமனை கூறியது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஹன்ட்ஸ்வில்லே மருத்துவமனையின் பதிவின்படி, காசிடி மற்றும் டிலான் ஸ்காட் ஆகியோர் தங்கள் மகள் லெனானை டிசம்பர் 18 அன்று வரவேற்றனர்.
மருத்துவமனையின் இந்த சுவாரஸ்யமான பதிவு அதிக கவனத்தைப் பெற்றது.