day, 00 month 0000

ஆர்ஜென்டினாவின் நாணயத்தாளில் இடம்பிடிக்கும் மெஸ்சி

உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை ஆர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தில் வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் கோப்பை வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது.

இதற்கு முன்னர் அந்த அணி 1978இ ல் தான் அந்த அணி கோப்பை வென்றிருந்தது. இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது.

கோப்பையுடன் தாயகம் திரும்பிய  மெஸ்சி, ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டனர். வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில், உலக கோப்பையை பெற்று தந்த மெஸ்சியை கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா நாணயத்தில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின் படி ஆயிரம் பெசோ பணத்தாளில் மெஸ்சியின் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியை கௌரவிக்க, அத்தாளில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்