day, 00 month 0000

அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம். 55 ஆயிரம் கட்டடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டி்ல உள்ள பொருட்கள் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். குறித்த நிலநடுக்கம் காரணமாக வீடு, வணிக நிறுவனங்கள் என்று மொத்தம் 55 ஆயிரம் இடங்களில் மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரிக்டரில் 6.4 என பதிவாகி இருந்தாலும் கூட குறிதத்  நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

அமெரிக்காவில் சில இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படாத நிலையில் இன்று திடீரென்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா மகாணத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹம்போல்ட் கவுண்டி, பெர்ன்டால் உள்ளிட்ட பகுதிகளில் குறித்த  நிலநடுக்கம் என்பது உணரப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் என்பது சில வினாடிகள் நீடித்தது. அதன் பிறகு இயல்பு நிலை ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சில வீடுகள், வணிக நிறுவனங்களில் எதிரொலித்தது. அதன்படி சில இடங்களில் உள்ள கண்ணாடிகள் உடைந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும் எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்காவின் புவியியல் மையம் கூறுகையில், ‛‛அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்ன்டால் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 12 கிலோமீட்டரில் பூமிக்கடியில் 16.1 கிலோமீட்டரில் ஏற்பபட்டுள்ளது.

தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் கடலோர பகுதியாகும். இதனால் சுனாமி ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெர்ன்டால் மற்றும் ஹம்போல்ட் கவுண்டி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் வீடுகள்,வணிக நிறுவனங்கள் என சுமார் 55 ஆயிரம் கட்டடங்கள் மின்சாரம் இன்றி உள்ளன. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்