cw2
உலக சுகாதார அமைப்பானது தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கொலரா தொற்று பரவி வருவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
கொலரா தொற்று அசுத்தமான நீர் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றின் மூலம் பரவும் எனவும், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் வழக்கத்தை விட கொலரா தொற்று மிக அதிக எண்ணிக்கையில், அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் 20க்கும் குறைவான நாடுகளில் மட்டுமே, கொலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
இதனால், லெபனான், மாளவி, ஹைதி, மற்றும் சிரியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் பருவநிலை மற்றும் காலமாறுபாடு காரணமாக தான் நடப்பு ஆண்டில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.