day, 00 month 0000

குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம்; மக்கள் தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசின் திட்டம்

உலக நாடுகளில் தற்போது பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் பல நாடுகளிலும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

அதே சமயம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதாவது பிறப்பு விகிதம் குறைந்து வரும் இந்த நேரத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஜப்பான் அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளை ஊக்குவிக்க பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவாக இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி மூன்று லட்சத்து 402 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய திட்டம் ஜனவரி 2023ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்