cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

சீனாவில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்

சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. 

சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.  

இதில் பயணிகளை கவர்வதற்கு என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற வகையில் ஒரு நாள் மட்டும்  தங்குவதற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு நாள் தங்கும் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்நாட்டில் இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தளங்களுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் இணையதளம் வழியே முன்பதிவுகள் நடக்கிறது. அதில் தள்ளுபடிகள் அளிக்கப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள். 

அடுத்த வருடத்தை உற்சாகமாக தொடங்க விரும்பும் சுற்றுலா பயணிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பளிக்க தொடங்கியுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்