// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"உலக பத்திரிக்கையாளர்களின் படுகொலைக்கு காரணமான சர்வதேச நாடுகள்"

ரஸ்யா-உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், இந்தாண்டு உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கொண்டவாறு கூறப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில், “இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுஉள்ளனர்.

கடந்தாண்டில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்தாண்டு கூடுதலாக 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையே நடந்த போரில் மட்டும், 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோ, கரீபியன் தீவு நாடான ஹைதி ஆகியவற்றில் நடந்த வன்முறை, பயங்கரவாத சம்பவங்கள், குழுக்களுக்கு இடையேயான மோதலில் கணிசமான பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நடந்த வன்முறையில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வட அமெரிக்க நாடான கொலம்பியா, தென் கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸ் ஆகியவை, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடுகளாக உருவெடுத்துள்ளன.” என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்