cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

சொலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் எச்சரிக்கை மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சாலமன் தீவுகளின் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

முதலில் இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவிலானது என்று கூறப்பட்டது. பிறகுக், யுஎஸ்ஜிஎஸ் நிலநடுக்கத்தின் அளவை ஆரம்ப 7.3ல் இருந்து குறைத்தது.

"மக்கள் இப்போது உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று பிரதமர் மனாசே சோகவரே அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்