cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

கால்பந்து உலகக்கோப்பையின் தொடக்க நிகழ்வுகள் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை போட்டித்தொடர்(FIFA) 2022 நவம்பர் 20(இன்று) முதல் டிசம்பர் 18 வரை கட்டாரில் நடைபெறவுள்ளது.

மேலும், போட்டித்தொடரில் 32 அணிகள் தேர்வு செய்யப்பட்டு கோப்பைக்காக போட்டியிடுகின்றன.

கத்தார், இக்கடூர், செனகல், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ், ஆர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா, ஸ்பெயின், கொஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான், பெல்ஜியம், கனடா மொராக்கோ, குரோஷியா, பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன், போர்ச்சுகல், கானா, உருகுவே மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ரஷ்யாவில் நடந்த 2018 கால்பந்து உலகக்கோப்பை போட்டித்தொடரில் வெற்றிக்கோப்பையை வென்ற பிரான்ஸ் நடப்பு வெற்றியாளராக உள்ளது

மத்திய கிழக்கிலிருந்து ஒரு நாடு கால்பந்து உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கட்டார் முழுவதும் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காக தயார்செய்யப்பட்டுள்ளன. இத்தொடரின் முதல் ஆட்டமாக அல்கோரில் உள்ள அல் பேட் விளையாட்டரங்கில் கட்டார் மற்றும் இக்கடூர் அணிகள் போட்டியிடுகின்றன. இப்போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்த்தவர்களுடன் ஒப்பிடுகையில், கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளும் கால்பந்து ரசிகர்கள், அனுமதிச்சீட்டுக்களுக்காக கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிக கட்டணம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அங்குள்ள எட்டு மைதானங்களில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் அனுமதிச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உலகக் கால்பந்தாட்ட சம்மேளனமான FIFA தெரிவித்துள்ளது.

இதுவே கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக அதிக விலையை கொண்ட அனுமதிச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படு்ம் தொடராக காணப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்