// print_r($new['title']); ?>
day, 00 month 0000

காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்!

காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் 18 நாட்கள் வைத்த சம்பவம் நடந்துள்ளது.

இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கோல் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

அப்போது அவர்களிடையே நடப்பு ஏற்பட்டு அந்த நட்பு பின்பு காதலாக மாறி உள்ளது.

அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு அவர்கள் மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார். பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் ஒரு பெரிய குளிர் சாதனப்பெட்டி வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்தது, அவரது தந்தை அவரை பார்க்க டெல்லிக்கு வந்துள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் பொலிஸில் புகார் செய்து உள்ளார்.

பொலிஸார் இரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்