cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

"ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல"

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. கூட்டணி வேறு கொள்கை வேறு. மேலும் ஜவஹர்லால் நேரு நாட்டை உருவாக்கினார். பிரதமர் மோடி நாட்டை விற்கிறார்" எனக் கூறியுள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்த போது கே.எஸ்.அழகிரி பேசியது,

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பெருமைப்பட வேண்டிய நாள். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி அவர். விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கை தான் காரணம். நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு இந்தியா வந்திருக்கும்.

நேரு உருவாக்கினார்.. மோடி விற்கிறார்

நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். ஒருவர் உருவாக்கினார். ஒருவர் விற்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம். இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்