day, 00 month 0000

தனுஷ்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு இன்று நீதிமன்ற பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிணை கோரி சிட்னி நீதிமன்றத்தில் இன்று கைவிலங்குடன் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசிய குணதிலக, டவுனிங் சென்டர் கோர்ட்டில் திரையின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

“அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதன் அடிப்படையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் வழங்கிய முகவரியில் அவர் இருப்பதாக அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

இந்தநிலையில் பிணை மறுக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க ஒரு புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்