தற்பொழுது நடைபெற்று வரும் ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்கான அவுஸ்திரேலிய சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் பல சம்பவங்களின் அடிப்படையில் வீரர் பானுக ராஜபக்ச மீதும் பல சம்பவங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பானுகா ராஜபக்ச அறையில் இல்லாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பானுகா ராஜபக்ச போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்து புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே பேருந்துக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மூவரடங்கிய குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை அணியின் சகல துறை வீரர் சாமிக்க கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க ஆகியோர் மீதும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.