ரி20 உலகக் கிண்ணப் போட்டி 2022 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 168 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. அதிகபட்சமாக பாண்டியா, விராட் கோஹ்லி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இதனையடுத்து 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர்.
4 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 13 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும்.