cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரிட்டன் இளவரசர் பட்டத்தை பறிக்கும் முடிவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ், தனது மகனும், நாட்டின் இளவரசருமான ஹாரியின் இளவரசப் பட்டத்தையும் அவரது மனைவி மேகன் மார்க்கலின் மற்றும் குழந்தைகளுக்கான அரச பட்டங்களை பறிக்கலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இளவரசர் சார்லஸ், வெளியிடவிருக்கும் 'ஸ்பேர்' புத்தகம் மற்றும் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியால் அரச குடும்பத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவர்களின் அரச பட்டங்கள் பறிக்கப்படலாம் என்று எழுத்தாளர் டாம் போவர் கூறினார்.

"அவர் (பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ்) மேகன் மற்றும் இளவரசர் ஹாரிக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தார், மேலும் அவர்கள் முன்னோக்கிச் சென்றால் அவர்கள் நம்ப முடியாத வகையில் ஒதுக்கி வைக்கப் போவதாக எச்சரித்தார். அதனால் ஹாரி தம்பதிகள் கவலையடைந்துள்ளனர்,” என்று டாம் போவர் தெரிவித்தார்.

இளவரசர் சார்லஸின் புத்தகமான 'ஸ்பேர்' பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்படுகிரது. "அசைக்க முடியாத நேர்மை" மற்றும் அன்பின் நித்திய சக்தியைப் பற்றிய நுண்ணறிவு, வெளிப்படுத்துதல், சுய பரிசோதனை மற்றும் கடின வெற்றி, என பல முக்கியமான விஷயங்களைப் பற்றி சொல்லும் புத்தகம் அது என்று டாம் போவர் தெரிவித்தார்.

"வாரிசு மற்றும் பரம்பரை" (the heir and the spare) என்ற சர்ச்சை தற்போது வெளிப்படையாக பேசப்படுகிறது. இது பெரும்பாலும் அரச உடன்பிறப்புகளை விவரிக்க பயன்படுத்தப்படும் சொற்றொடர் ஆகும். ஹாரியின் சகோதரர் வில்லியம் இப்போது வேல்ஸ் இளவரசர் மற்றும் பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் வாரிசாக உள்ளார்.

ஹாரி பிறந்தபோது, ​​வாரிசு வரிசையில் வில்லியமுக்குப் பின்னால் இருந்தார், ஆனால் பின்னர் கீழே தள்ளப்பட்டார். கடந்த மாதம் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் தந்தை, மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்லேவும் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறியதால், "அரசக் குடும்பத்தின் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றினார்கள்.  

அண்மையில் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்தில், ஹாரியும் அவரது குடும்பமும் கலந்துக் கொண்டது. அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய பிறகு, குடும்பத்துடன் இணைந்து கலந்துக் கொண்ட மிகப் பெரிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ராணியின் காலத்தில் தான் இங்கிலாந்து நாட்டிலும், அரசப் பரம்பரையிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்