cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

புதைத்தாலும் முளைப்பேன்,என்னை கொல்ல முயல்வது வீண்; இம்ரான் கான்

 பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று முன்தினம் மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. 

தாக்குதலில் இம்ரான் கானின் ஆதரவாளர் உயிரிழந்தார். மேலும், மொத்தம் 13 பேர் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர். மேலும் ஆட்டோமேடிக் ரைஃபிள் துப்பாக்கி வைத்திருந்த நபரை பொதுமக்களும், இம்ரான் கானின் ஆதாரவாளர்களும் அடித்தே கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது, இம்ரான் கானுக்கு காலில் கட்டுப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் மூவரும்தான் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ளார். தனது தலைமையில் மக்கள் ஒன்றிணைவதை ஒடுக்கவே மத பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். 

மேலும், அவர் கூறியதாவது,"மத பயங்கரவாதம் என்ற பெயரில் என்னை கொலை செய்யப்பார்க்கின்றனர். என்னை மீதான தாக்குதலுக்கு முந்தைய நாளே, அதுகுறித்த தகவல் எனக்கு கிடைத்தது. வைசிராபாத் அல்லது குஜ்ரதில் என்னை கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்தது. 

முதலில் நான் மதத்தை நித்தனை செய்ததாக வாய்ஸ் டேப் வெளியிட்டார்கள். ஆளும் கட்சிகளில் ஒன்றான பிஎம்எல்என் அதை வாய்ஸ் டேப் போலியாக தயாரித்து பரப்பியது. எனக்கு தெரியும் அதை யார் செய்தது என்று, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதை கண்டிபிப்பது எளிது.  

தன்னை 4 பேர் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதில் 3 பேரின் பெயரை அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார். மேலும், தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் சதி குறித்து முழுமையாக வீடியோ ஒன்றில் பேசி அதனை பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், தனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால் அது வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  தன்னை அழிக்கும் சதி ஒருபோதும் நிறைவேறாது எனவும் அழிந்தாலும் மீண்டும் முளைத்து எழுவேன் எனவும் கூறினார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்