cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நேத்தன்யாகு பிரதமராக வாய்ப்பு

இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நேற்று பொதுத்தேர்தல் நடந்தது.இதில் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இதுவாகும்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்டவரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்