cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரெஞ்சு ஓவியர் மரணம்! - லூவரில் அஞ்சலி!!

பிரான்சின் புகழ்பெற்ற ஓவியர் Pierre Soulages முதுமை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை தனது 102 ஆவது வயதில் மரணித்திருந்தார்.

பல புகழ்பெற்ற ஓவியங்களுக்கு சொந்தக்காரரான இவர், கறுப்பு நிறத்தினை அதிகளவு பயன்படுத்தி கேன்வாஸ் வடிவ ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்றவராவார். ‘கறுப்புக்கு பின்னால் இருக்கும் ஒளியினை கண்டுபிடித்தார்’ ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது அஞ்சலி குறிப்பிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவை அடுத்து, தேசிய அஞ்சலி நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 2 ஆம் திகதி புதன்கிழமை லூவர் அருங்காட்சியகத்தின் Cout Carree du Louvre அரங்கில் பகல் 3 மணிக்கு அவருக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற உள்ளது.

கடந்த வருட இறுதியில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் Pierre Soulages வரைந்திருந்த ஓவியம் ஒன்று 20 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்