// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வேகமெடுக்கும் கொவிட்; சீனாவின் முக்கிய நகரங்களுக்கு மீண்டும் பூட்டு!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலக நாடுகளை புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளியாகாத நிலையில் தற்போது சீனாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் எதிரொலியாக பல நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகபட்சமாக கடந்த திங்கட்கிழமை மட்டும் இரண்டாயிரம் பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதேவேளை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பெய்ஜிங்கில் நடைபெறயிருப்பதையொட்டி தொற்று அங்கு பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கொரோனா பரிசோதனைகளும் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்