// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ விபத்து

சீனாவின் ஹுனான் வட்டாரத்திலுள்ள 200 மீட்டர் உயரமுள்ள கட்டடம் ஒன்று இன்று தீக்கு இரையானதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தொலைத்தொடர்புக் கட்டடத்தில் உள்ள நிறைய தளங்களில் தீ மூண்டதாக அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டது.

கட்டடம் முழுவதும் தீ பரவுவதையும் வான் வரை புகை உயர்வதையும் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. கட்டடத்தின் வெளிப்புறம் கருகியிருப்பதைக் காட்டும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

எனினும் தீ அணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் சேதவிபரங்கள் வெளியாகவில்லை.  

தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்