// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரஷ்யா ஆக்கிரமித்த 3 பகுதிகளை மீளக் கைப்பற்றிய உக்ரைன் படைகள்

உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக தனது படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறைத் தலைவரிடமிருந்து நல்ல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

இதேவேளை, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் பகுதிகளை மீளக் கைப்பற்றியதை உறுதிப்படுத்தும் வகையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சன் கிராமத்தில், தங்கள் இராணுவத்தினர் உக்ரேனிய கொடியை உயர்த்தும் படத்தை ஜனாதிபதி மாளிகை தலைமை அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லிசிசான்ஸ்க் பகுதியிலும் உக்ரைன் இராணுவத்தினர் முன்னேறியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்