ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றையதினம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 88% வாக்குகளுடன் ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
அத்தோடு, சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு அதிபராக அதிகபட்ச வாக்குகளை புடின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இதற்கு முன்னதாக Public Opinion Foundation (FOM) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், The Russian Public Opinion Research Centre (VCIOM) விளாடிமிர் புடினுக்கு 87% வாக்குகளை வழங்கியுள்ளது.
அத்துடன், வெளியான ஆரம்பக்கட்ட முடிவுகளின் அடிப்படையில் 71 வயதான புடின் இலகுவாக தனது புதிய 6 ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், நடத்தப்படட்ட இந்த தேர்தலானது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் இல்லை என தெரிவித்து வாக்குப்பதிவின் போது ஆயிரக்கணக்கான எதிர் கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளரும், புடின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்து, போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார், ஆகையால் இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.