day, 00 month 0000

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்; பற்றி எரியும் வாக்குப் பெட்டிகள்: தொடரும் வன்முறை சம்பவங்கள்

ரஷ்ய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய புடின் எதிர்பாளர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரையான மூன்று நாட்கள் 20 பிராந்தியங்களில் உள்ள 29 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், முதல் நாளில் வாக்குச் சாவடிகளில் சிலவற்றில் இடையூறு விளைவித்த புடின் எதிர்பாளர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரையில் குறைந்தது எட்டுபேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களும் உக்ரைனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளனவா என்ற கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றையதினம் வாக்குப் பெட்டிகளில் பச்சைச் சாயம் ஊற்றப்பட்டதுடன், வாக்குப் பெட்டிகள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டது என பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் 214 வாக்குப்பெட்டிகள் நேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ரஷ்யாவில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புடினை தேர்தலில் எதிர்க்க எவரும் இல்லாததால் புடினே வெற்றி பெறுவார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. தேர்தலில் புடின் வெற்றிப்பெறும் பட்சத்தில் 2023 வரை தனது ஆட்சியில் நீடிப்பார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்