ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆப்கானிஸ்தான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 10 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1,600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.