இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தகவலை சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் எனும் இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இந்தியாவின் தனிநபர் நுகர்வானது 2011ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டுக்கு 2.9 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமத்துவமின்மையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Knight Frank அறிக்கையின் படி, இந்திய நாட்டில் 250 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் 13,263 ஆக காணப்படுகிறது.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் குறித்த எண்ணிக்கை சுமார் 50 வீதமாக அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட வேகமாக வளரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா , துருக்கி , மலேசியா ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன.