day, 00 month 0000

மீண்டும் திறக்கப்பட்ட ஈபிள் கோபுரம்

பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்ட பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஞாயிற்றுக்கிழமை (25) பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்புக்கான காரணம்

கோபுரத்தில் துருப்பிடித்த தடயங்கள், சம்பள உயர்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னத்தை சிறப்பாகப் பராமரிக்கக் கோரி அதன் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஈபிள் கோபுரத்தின் இயக்நர்கள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் எட்டிய உடன்பாட்டுக்கு அமைவாக பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

3 மாதங்களில் இரணடாவது தடவையாக பூட்டு

கடந்த மூன்று மாதங்களில் 330-மீட்டர் (1,083-அடி) கோபுரம் இரண்டாவது தடவையாக இது போன்ற பணிப்பகிஷ்கரிப்பினை எதிர் கொண்டது.

ஈபிள் கோபுரத்தின் இயக்குநர்கள், ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக அனுமதி சீட்டுகளை வைத்திருந்த பார்வையாளர்களுடன் மன்னிப்பு கோரியதுடன், பாரிய இழப்பினையும் சந்தித்தது.

பாரிஸ் ஒலிம்பிக்கின் முக்கிய சின்னம்

135 ஆண்டுகள் பழமையான பாரிஸ் ஈபிள் கோபுரம் இந்த கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் முக்கியமாக இடம்பெறும்.

பாரிஸில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்கங்கள் வரலாற்றுச் சின்னத்தில் இருந்து எடுக்கப்பட்ட அறுகோண இரும்புத் துண்டுகளால் பதிக்கப்பட்டுள்ளன.

10 நாட்கள் மூடப்பட்ட கோபுரம்

ஈபிள் கோபுரம் பொதுவாக வருடத்தில் 365 நாட்களும் திறந்திருக்கும்.

கடந்த ஆண்டு, நாட்டின் ஓய்வூதிய முறையை சீர்திருத்த அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களின் போது நினைவுச்சின்னம் பார்வையாளர்களுக்கு டிசம்பரில் 10 நாட்களுக்கு மூடப்பட்டது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்