day, 00 month 0000

UPI பணம் செலுத்தும் முறை 7 நாடுகளில் அறிமுகம்: இந்தியர்கள் பணத்தை எடுத்துச் செல்ல தேவையில்லை

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது இந்தியாவில் சிறிய சில்லறை கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அமுலில் இருந்து வருகிறது.

வாடிகையாளர்கள் தம்வசம் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. UPI பணம் செலுத்தும் முறை இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், மாறிவரும் தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு, UPI டிஜிட்டல் பணம் செலுத்தல் முறை வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை,பிரான்ஸ் உட்பட 7 நாடுகளில் UPI பயன்படுத்தலாம்

தற்போது, ​​Unified Payments Interface(UPI) வெளிநாடுகளிலும் செல்லுபடியாகும் என்பதால், அந்த நாடுகளின் நாணயங்களில் பணம் செலுத்த முடியும்.

எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நாட்டின் நாணயத்தை தம்வசம் கொண்டு செல்ல தேவையில்லை.

இந்தியாவில் மட்டுமின்றி, தற்பேது இலங்கை, பூட்டான், மொரிஷியஸ், பிரான்ஸ், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், சிங்கப்பூர் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் UPI மூலம் கட்டணத்தை செலுத்த முடியும்.

இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPIமூலம் பணம் செலுத்தலாம். மொரிஷியஸிலும் இந்தியர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 16 வங்கிகள் PhonePay முறையை அங்கீகரித்துள்ளன

அதேபோல் மொரிஷியஸ் பிரஜைகளுக்கு இந்தியாவில் அந்த வசதி வழங்கப்பட்டுள்ளது, எனவே அவர்கள் மொரிஷியஸ் பணத்தை டிஜிட்டல் முறையில் இந்தியாவிலும் செலுத்தலாம்.

இந்தியாவை தவிர UPI சேவைகளை அனுமதித்த முதல் நாடு பூட்டான். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் UPI சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

Bhim App & Royal Monetary Authority of Bhutan ஆகியவை இதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியான UAE,அந்நாட்டின் Mashreq வங்கியுடன் இணைந்து, அண்மையில் UPI பணம் செலுத்துதல் முறையை அங்கீகரிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கூட்டு உடன்பாட்டை அறிவித்தது.

அத்துடன் National Payments Corporation of India அண்மையில பிரான்சின் Lira Networkக்குடனும் இணைந்துக்கொண்டது.

இந்தியாவின் Bank of Baroda,Bank of India,Bank of Maharashtra,Canara Bank,Central Bank of India,CITY UNION BANK LTD,ESAF Small Finance Bank Limited,FEDERAL BANK LTD,Indian Bank,IndusInd Bank Ltd,Karur Vysya Bank Ltd,Punjab & Sind Bank,Punjab National Bank,SOUTH INDIAN BANK LTD,Cosmos Bank,Union Bank of India ஆகிய வங்கிகள் PhonePay databaseசின் UPI பணம் செலுத்தும் முறையை அங்கீகரித்துள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்