cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினருக்கு ஆண் குழந்தை

பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரண்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தார். இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோஹ்லி தம்பதியினருக்கு கடந்த 15ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தம்பதியினர் குழந்தைக்கு 'ஆகாய்' என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகன் பிறந்துள்ளமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும், தம்பதியினர் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.

"மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த இதயத்துடனும், எங்கள் ஆண் குழந்தை ஆகாய் மற்றும் வாமிகாவின் சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம்.எங்கள் தனியுரிமையை தயவுசெய்து மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்றும் கூறியுள்ளார்.

கர்ப்பம் குறித்து வதந்திகள்

தம்பதியினர் தங்கள் முதல் குழந்தைப் போலல்லாமல், கர்ப்பம் குறித்து எதையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் குழந்தையின் போது அனுஷ்கா மற்றும் விராட் அவர்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தது மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

எனினும், இரண்டாவது குழந்தையின் போது எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எந்த சமூக ஊடக இடுகைகளையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பொதுத் தோற்றங்களையும் அனுஷ்கா குறைத்திருந்தார்.

மறுபுறம், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகினார். இறுதி மூன்று ஆட்டங்களில் அவர் விளையாட இருந்தார்.

பின்னர் தொடரில் இருந்து அவர் முழுமையாக விலகினார். அனுஷ்காவின் இரண்டாவது கர்ப்பம் குறித்த செய்தி இணையத்தில் பரவியது, ஆனால் தம்பதியினர் இன்று வரை அமைதியாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்