day, 00 month 0000

இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி வனிந்து சாதனை

இருபதுக்கு 20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனதாக்கிக்கொண்டார்.

தம்புல்லாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதன்படி, அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் 63 போட்டிகளில் கலந்து கொண்டு இந்த 100 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 53 போட்டிகளில் நூறு விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்