day, 00 month 0000

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்?

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த மறுநாள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

 இதுதொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜய் மக்கான், “நாங்கள் அளிக்கும் காசோலையை வங்கிகள் வாங்குவதில்லை நேற்று எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன.

2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித்துறை விதித்துள்ளது. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. 

இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இதுவெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்