// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு

கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் காலாண்டுக்கான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 3.3 வீதமாக பதிவாகியுள்ளது.

முதலாம் காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி தொடர்பில் எதிர்வுகூறப்பட்ட அளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மொத்த தேசிய உற்பத்தியானது இரண்டாம் காலாண்டில் 0.8 வீதமாக உயர்வடைந்துள்ளது.

வீடுகளுக்கான முதலீடு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீடித்து உழைக்கும் வீட்டு உபகரணங்களுக்காக செலவிடும் தொகைகளும் குறைவடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்