// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சோவியத் யூனியனின் இறுதி ஆட்சியாளர் காலமானார்!

சோவியத் யூனியனின் இறுதி ஜனாதிபதியாகவும், சோவியத் ஒன்றியத்தின் பொது செயலாளராகவும் பணியாற்றிய  மைக்கேல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் 80கள் மற்றும் 90களில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மனிதராகவும், உலக நாடுகளின் அச்சுறுத்தலுக்குரிய அதேவேளை சோவியத் யூனியனின் பெரும் மதிப்பிற்குரிய ஒரு தலைவராகவும் காணப்பட்டிருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் காணப்பட்ட இரும்புத் திரையை அகற்றி ஜேர்மனியை அமெரிக்காவுடன் மீண்டும் ஒன்றிணைத்தது மட்டுமல்லாது ஐரோப்பாவில் ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் ஆயுத பாவனை என்பவற்றை வெகுவாக குறைப்பதற்குப் பேராடி அதில் வெற்றியும் கண்டார்.

சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றியம் என்பது சுமார் 15 சிறு நாடுகளின் கூட்டிணைந்த ஆட்சியாக காணப்பட்டது.

சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு பிளவுபட்டு தனித்தனி நாடுகளாக சுதந்திரம் பெற்று பிரிந்து சென்றமையும் அதன் பின்னரே ரஷ்யா என்ற ஒரு தனி நாடு உருவாகியமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்யா மேற்கொண்டு வரும் உக்ரைனுக்கெதிரான போரும் மேற்படி சோவியத் யூனியனை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற அதிபர் புடினின் நிலைப்பாட்டில் என்பதிலாகும்.

இந்த நிலையில் சோவியத் யூனியனின் பிளவுக்கும், பிரிவுக்கும் மறைந்த அதிபர்  மைக்கேல் கோர்பச்சேவ்  தான் மூல காரணம் எனவும், இவரின் மேற்படி செயலை எந்தக் காலத்திலும் ரஷ்யர்களோ அல்லது சோவியத் யூனியனின் மக்களோ மன்னிக்க மாட்டார்கள் என சர்வதேச செய்திகள் ரஷ்யா ஊடகங்களை மேற்கோட் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஐரோப்பாவில் நடைபெற்ற பனிப்போரை இரத்தம் சிந்தாமல் முடிவுக்கு கொண்டு வந்த மறைந்த அதிபர்  மைக்கேல் கோர்பச்சேவ்  ஏன் சோவியத் யூனியனின் பிளவை தடுக்காமல் போனார்? என்ற கேள்வி இன்றும் விடை தெரியாத ஒரு கேள்வியாகவே காணப்பட்டு வருகின்றது.

மறைந்த அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் உடல் நிலை மோசமான நிலையில் கடந்த யூலை மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காலமானார்.

இந்நிலையில் முன்னாள் சோவியத் யூனியனின் பொருளாதார நிபுணர்  ருஸ்லான் கிரின்பெர்க் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் எமக்கு அனைத்து சுதந்திரங்களையும் நாம் கேட்காமலே பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த சுதந்திரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எமக்கு சொல்லிக் கொடுக்காமல் சென்று விட்டார் என தெரிவித்திருந்தார்.

அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ்ன் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரபல்யங்கள் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்