day, 00 month 0000

லிபியா வெள்ளம் - பத்தாயிரம் பேரை காணவில்லை

லிபியாவில் சுனாமிபோல வந்த வெள்ள நீரினால் அடித்துச்செல்லப்பட்டவர்களி;ன் உடல்களை மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

2500 பேராவது உயிரிழந்திருக்ககூடும் என மோசமாக பாதிக்கப்பட்ட டெமா  நகரின் அம்புலன்ஸ் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெமாவில் இரண்டு  அணைகளும் நான்கு பாலங்களும் முற்றாக இடிந்து விழுந்துள்ளன.

சுமார் பத்தாயிரம் பேரை காணவில்லை என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

உதவிகள் வந்துசேர ஆரம்பித்துள்ளன,எனினும் லிபியாவின் அரசியல் சூழ்நிலை காரணமாக அரசியல் சூழ்நிலை மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

லிபியா இரண்டு போட்டி அரசாங்கங்களின் கீழ் பிளவுபட்டு;ள்ளது.

நகருக்குள் வெள்ள நீர் செல்வதையும் வாகனங்கள் நீரில் மிதப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் கடலிற்குள் அடித்துச்செல்லப்பட்டமை பலர் மரங்களை பிடித்துக்கொண்டு உயிர் தப்பியமை குறித்த மனதை உலுக்கும் கதைகள் வெளியாகின்றன.

நான் பார்த்த காட்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின அது சுனாமி போல காணப்பட்டது என ஹிசாம் சிக்கியோட் என்பவர் கிழக்கு லிபியாவில் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

டெமா நகரில் பாலமொன்று இடிந்து விழுந்ததால் நகரின் பெருமளவு பகுதி நீரில் அடித்து செல்லப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு மக்கள் வசித்த பகுதி அழிந்துவிட்டது பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்