உக்ரைனின் எதிர்த் தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என ஜெரனல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிருடன் கூடிய வானிலையானது உக்ரைனின் படை நடவடிக்கையை மிகவும் கடினமாக்கும் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்பார்த்ததை விட மிகவும் மந்தமாகவே எதிர்த் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதையும் ஜெரனல் மார்க் மில்லி ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இரண்டு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்தாக்குதல்கள் தோல்வி அடைந்துள்ளதா என்பதை உடனடியாக கூற முடியாது எனவும் உக்ரைன் படைகள் நிலையான வேகத்தில் முன்னேறிவருவதாகவும் ஜெனரல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிரான வானிலை நிலைமைகள் ஏற்படுவதற்கு இன்னும் 30 தொடக்கம் 45 நாட்கள் வரை இருக்கின்றன எனக் கூறியுள்ள அவர், இன்னும் உக்ரைனிய படைகளுக்கு காலம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யப் படைகளிடம் இருந்து தமது பகுதிகளை விடுவிக்கும் படை நடவடிக்கையை கோடைகாலத்தில் உக்ரைன் ஆரம்பித்திருந்த போதிலும் தற்போதுவரை சிறிய அளவிலான வெற்றிகளையே அவர்களால் பெற முடிந்துள்ளது.
எனினும் உக்ரைனின் தென் பிராந்தியத்தில் ரஷ்யாவின் வலிமையான முதல் வரிசை பாதுகாப்பு அரண்களை தகர்த்து முன்னேறியுள்ளதாக உக்ரைன் படையினர் கூறியுள்ளனர்.