துபாயில் மிகவும் வித்தியாசமான வீட்டை கட்டி உலகளவில் வைரலான செல்வந்தர் ஜகாரியா காலித் இப்ராஹிம் தனது 96வது வயதில் காலமானார்.
அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது,
காலித்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஜோர்டனை பூர்வீகமாக கொண்ட காலித் துபாய்க்கு 1960களில் வந்தார்.
துபாயின் மிகவும் விசித்திரமான மற்றும் பிரம்மிக்க வைக்கும் வீடு என கூறும் அளவுக்கு அதன் தோற்றம் காட்சியளிக்கிறது.
வீட்டின் கட்டுமானம் 1965 இல் தொடங்கியது, இறுதியாக அவர் 1981 இல் தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறினார்.
ஜகாரியாவின் மூத்த மகன் ரேனி கூறுகையில், எங்கள் வீடு கப்பலை நினைவுகூறும் வகையில் இருக்கும்.
ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் இருந்த குழந்தைகள் வீட்டின் தோற்றத்தை பார்த்து ராட்சத பாம்புகள் வசிப்பதாக நினைத்து கற்களை வீசியிருக்கின்றனர், இதனால் பல ஜன்னல்கள் உடைந்துள்ளது என கூறியுள்ளார்.