day, 00 month 0000

லீக்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இன்டர் மியாமி

லீக்ஸ் கிண்ண(Leagues Cup) இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணி பெனால்டி முறையின் அடிப்படையில் நாஷ்வில்லி (Nashville) அணியை வீழ்த்தியது.

ஜோடிஸ் பார்க் (Geodis Park) மைதானத்தில் இன்றைய தினம் குறித்த போட்டி நடைபெற்றது.

 

ஆட்டத்தின் முதல் பாதியின் 23வது நிமிடத்தில் இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரரும் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அணிக்கான முதலாவது கோலை மிக சிறப்பாக பதிவுசெய்தார்.

இந்த கோலின் மூலம் இன்டர் மியாமி முதலாவது பாதியின் நிறைவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

Lionel Messi

Lionel Messi

முதல் பாதியில் கோல் பதிவு செய்யாத நாஷ்வில்லி (Nashville) அணி இரண்டாவது பதியிலாவது கோல் பதிவு செய்யும் என ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாஷ்வில்லி (Nashville) அணி வீரரான Fafà Picault அணிக்கான முதலாவது கோலை பதிவு செய்தார்.

இந்த கோலின் மூலம் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தொடர்ந்தது.

அதனை தொடர்ந்து போட்டியின் 70வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்ய முற்பட்டு அதனை தவறவிட்டார்.

ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் நாஷ்வில்லி (Nashville) அணி வீரரான சாம் சுரிட்ஜ் (Sam Surridge) அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்ய முற்பட்ட வேளையில் எதிரணியின் கோல் காப்பாளர் டிரேக் காலண்டர் (Drake Callender) மிகவும் சிறப்பாக அதனை தடுத்தார்.

போட்டியானது இரண்டாவது பாதியின் முடிவிலும் சமநிலையில் தொடர்ந்தது.

அதனை தொடர்ந்து வழங்கப்பட குறித்த மேலதிக நேரத்திலும் இரு அணிகளினாலும் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.

பின்னர் கால்பந்தாட்ட விதிமுறைகளுக்கு அமைய இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி , முதலில் களமிறங்கிய இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரரும் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) அணிக்கான முதலாவது கோலை பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து போட்டியானது 1-0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்தது.

இன்டர் மியாமி (Inter Miami) அணிக்கு பதிலடி கொடுக்கும் முகமாக நாஷ்வில்லி (Nashville) அணி வீரரான ஹனி முக்ஹட்டார் அடித்த கோலின் மூலம் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தொடர்ந்தது.

 

பின்னர், இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரர் செர்ஜியோ புஸ்கெட்ஸ் (Sergio Busquets) அடித்த கோளின் மூலம் இன்டர் மியாமி (Inter Miami) அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

 

அடுத்த கோலை நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் ராண்டால் லீல் (Randall Leal) தவறவிட்டதன் காரணமாக போட்டியில் தொடர்ந்து இன்டர் மியாமி (Inter Miami) அணி முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து லியோனார்டோ காம்பானா (Leonardo Campana )அடித்த கோலின் மூலம் இன்டர் மியாமி (Inter Miami) அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

 

மேலும் தொடர்ந்த போட்டியில், நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் அனிபால் கோட் ஒய் (Aníbal Godoy) அடித்த கோலின் மூலம் 2-3 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி (Inter Miami) முன்னிலை வகித்தது.

தொடர்ந்த போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணி சார்பில் களமிறங்கிய கமல் மில்லர் (Kamal Miller) அணிக்கான நான்காவது கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணி 4-2 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்தது.அதன் பின்னர், நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் வாக்கர் சிம்மர்மேன் (Walker Zimmerman) அடித்த கோலின் மூலம் 4-3 என இன்டர் மியாமி (Inter Miami) முன்னிலை வகித்தது.

இன்டர் மியாமி (Inter Miami) அணி சார்பில் களமிறங்கிய விக்டர் உல்லோவா (Víctor Ulloa) அடுத்த கோலை அடிக்க தவறினார்.

தொடர்ந்த போட்டியில், நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் சாம் சுரிட்ஜ் (Sam Surridge) பதிவு செய்த கோலின் மூலம் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தொடர்ந்தது.

அடுத்து இன்டர் மியாமி (Inter Miami) அணி சார்பில் களமிறங்கிய செர்கி க்ரிவிட்சோவ் (Serhiy Kryvtsov) தனது வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி 5-4 என மீண்டும் இன்டர் மியாமி (Inter Miami) அணியை முன்னிலைப்படுத்தினர்.

அந்த கோலிற்கு பதிலடி கொடுக்கும் முகமாக நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் ஷாகுவெல் மூர் (Shaquell Moore) அணிக்கான ஐந்தாவது கொலை பதிவு செய்தார்.

இதன் மூலம் போட்டியானது மீண்டும் சமநிலையில் தொடர்ந்தது ,இதனால் இரு அணி ரசிகர்கள் இடையிலும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜோர்டி ஆல்பா (Jordi Alba) இன்டர் மியாமி (Inter Miami) அணிக்கான ஆறாவது கோலை பதிவுசெய்தார்.

தொடர்ந்து, நாஷ்வில்லி (Nashville) அணி சார்பில் களமிறங்கிய டேனியல் லோவிட்ஸ் (Daniel Lovitz) அணிக்கான யாராவது கோலை பதிவு செய்தார்.

இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரர் டியாகோ கோம்ஸ் (Diego Gómez) அடுத்து பதிவு செய்த கோலின் மூலம் 7-6 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி (Inter Miami) முன்னிலை வகித்தது.

அடுத்த கோலை நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் லூகாஸ் (Lukas MacNaughton) மிகவும் சிறந்த முறையில் கையாண்டு அணிக்கான ஏழாவது கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் ஆட்டம் மீண்டும் 7-7 என சமநிலையில் தொடர்ந்தது.

தொடர்ந்து இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரர் டேவிட் ரூயிஸ் (David Ruiz) அணிக்கான ஏதாவது கோலை பதிவு செய்தார்.

பதிலுக்கு நாஷ்வில்லி (Nashville) அணி வீரர் Sean Davis அடித்த கோளின் மூலம் போட்டியானது மீண்டும் சமநிலையில் தொடர்ந்தது.

வெற்றி, தோல்வி என்ற பெரும் பரபரப்பிற்கு மத்தியில் தொடர்ந்த போட்டியில், இன்டர் மியாமி (Inter Miami) அணி வீரர் டிஆண்ட்ரே யெட்லின் (DeAndre Yedlin) அடித்த கோலின் மூலம் மீண்டும் இன்டர் மியாமி (Inter Miami) முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய நாஷ்வில்லி (Nashville) அணியின் வீரரான ஜேக்கப் ஷாஃபெல்பர்க் (Jacob Shaffelburg) அணிக்கான ஒன்பதாவது கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் போட்டியானது மீண்டும் 9-9 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

இந்த கோல் இரு அணி ரசிகர்களையும் இருக்கையின் நுனிக்கு கொண்டுவந்தது.

இந்த போட்டியின் இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்கவில்லை.

தீர்மானமிக்க இறுதி நிமிடங்களை நோக்கி தொடர்ந்த போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணியின் கோல் காப்பாளரான டிரேக் காலண்டர் (Drake Callender) அணிக்கான இறுதி கோலை பதிவு செய்தார்.

இந்த கோலின் மூலம் இன்டர் மியாமி (Inter Miami) 10-9 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்த கோலிற்கான இறுதி வாய்ப்பு நாஷ்வில்லி (Nashville) அணிக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைய அணியை வெற்றிபெற வைக்கும் கோலை பதிவு செய்ய நாஷ்வில்லி (Nashville) அணி சார்பில் எலியட் பணிக்கோ (Elliot Panicco) முயன்ற வேளையில் அதனை மிகவும் சிறப்பாக எதிரணியின் கோல் காப்பாளரான டிரேக் காலண்டர் (Drake Callender) தடுத்தார்.

இதன் மூலம் இன்டர் மியாமி (Inter Miami) அணியானது பெனால்டி முறையின் அடிப்படையில் 10-9 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று லீக்ஸ் கிண்ண (Leagues Cup) கிண்ணத்தை கைப்பற்றியது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்