day, 00 month 0000

ஹவாய் காட்டுதீ- உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

ஹவாயை உலுக்கியுள்ள காட்டுதீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ள அதேவேளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுவதாக ஹவாய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

காட்டுதீயினால் முற்றாக அழிந்துள்ள மவுயி நகரத்தி;ல் தீயினால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான தடயவியல் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

தீயில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்ந்தும் காணப்படுகி;ன்றது.

இதேவேளை பெருமளவு அவசரநிலை தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுதீ பெருமளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும்  முற்றாக அழிந்துபோயுள்ள லகைனா நகரம் உட்பட சில பகுதிகளில் தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

சுமார் ஆயிரம் பேரை இன்னமும் தொடர்புகொள்ள முடியாதநிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள சமஸ்டி அவசர முகாமைத்துவ முகவர்அமைப்பின் அதிகாரி  ஜெரெமி கீறீன்பேர்க் இவர்களில் பலர் பாதுகாப்பாகயிருக்கலாம் ஆனால் அவர்களை சென்றடைவது கடினமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவே ஹவாய் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவாக காணப்படலாம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

லகைனாவில் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்