day, 00 month 0000

2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: ஜேர்மனிய நகரில் 13,000 பேர் வெளியேற்றம்

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். 

டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் நேற்று (07) தெரிவித்தனர்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு தொன் எடையுள்ள குண்டு ஒன்று டுசெல்டோர்வ் நகரிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு அருகில்  கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர்இந்த குண்டுசெயலிழக்கச் செய்யப்பட்டது.

2 ஆம் உலக யுத்தம் முடிவடைந்து 78 வருடங்கள் முடிவடைந்துள்ள போதிலும், ஜேர்மனிய நகரங்கள் பலவற்றில் வெடிக்காத குண்டுகள் அடிக்கடி மீட்கப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு பிராங்பர்ட் நகரில் 1.4 தொன் எடையுள்ள குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 65,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

கடந்த வருடம் மியூனிக் நகரில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று வெடித்ததால் நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்