day, 00 month 0000

கிறீஸில் கால்பந்தாட்ட ரசிகர்களிடையே மோதல்: ஒருவர் பலி, 96 பேர் கைது

கிறீஸில் கால்பந்தாட்டக் கழகங்களின் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

ஏதென்ஸின் புறநகர் பகுதியிலுள்ள நியா பிலாடெல்பெயா அரங்கில் நேற்று திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கிறீஸின் ஏ.ஈ.கே. ஏதென்ஸ் கழகம் மற்றும் குரோஷியாவின் டைனமோ ஸக்ரெப் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர்; இரு அணிகளின் ஆதராளர்களும் மைதானத்துக்கு வெளியே மோதிககொண்டனர்.

இதன்போது கிறீஸ் நாட்டைச் சேர்ந்த22 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் குரோஷியர்கள் எனவும் 3 கிறீஸ் நாட்டவர்கள் எனவும்

இச்சம்பவம் தொடர்பில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மோதல் சம்பவத்தை ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம் கண்டித்துள்ளது. அத்துடன், மேற்படி போட்டியை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தது.

இவ்விரு கழகங்களுக்கு இடையிலான 2 ஆவது கட்டப் போட்டி திட்டமிட்டபடி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குரோஷியாவின் ஸக்ரெப் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்