அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் ஆப்பிரிக்க கறுப்பின அமெரிக்கரான பராக் ஒபாமா, இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பராக் உசேன் ஒபாமா ஆகஸ்ட் 4, 1961 அன்று ஹவாயில் பிறந்தார்.
சட்டப் பட்டம் பெறுவதற்கு முன்பு, ஒபாமா சிகாகோவில் ஒரு சமூக அமைப்பாளராக இருந்தார். பின்னர் சிவில் உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
2004 ஆம் ஆண்டில், அமெரிக்க செனட் சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயக தேசிய மாநாட்டில் ஒபாமா முக்கிய உரையை ஆற்றியபோது, பலர் ஒபாமா மீது கவனம் செலுத்தினர்.
பின்னர், 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெய்னை தோற்கடித்து, ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா, ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
'ஒபாமா கேர்' என்ற புதிய சுகாதார நிவாரண சேவை முறையை அறிமுகப்படுத்தியதன் மூலமும், வரி நிவாரணம் மற்றும் வரவு-செலவு கட்டுப்பாட்டு ஒப்பந்தம் போன்ற பொது நிவாரணத்தின் மூலம் அமெரிக்க மக்களின் அன்பைப் அவரால் பெற முடிந்தது.
கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த அல் குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா ரகசிய திட்டம் தீட்டி கொலைசெய்தமை மிகவும் பேசுபொருளாக மாறியது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களில் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டிருந்ததையும் மறக்க முடியாது.
மேலும், அமெரிக்க சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவது, அத்துடன் 2015இல் புவி வெப்பமடைதல் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை வழிநடத்துவது ஆகியவை பராக் ஒபாமாவால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாகும்.
ஜனவரி 20, 2017 அன்று, பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு தலைவர் மற்றும் நல்ல மனிதர் என்ற அடிப்படையில் அவரது அடக்கமான குணநலன்களின் மூலம் அமெரிக்காவில் ஒரு அழியாத தலைமைத்துவ அடையாளமாக மாறினார் என்றே கூறவேண்டும்.
”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளிடஸ் (HERACLITUS) – என்ற கிரேக்க அறிஞர்.
இதை இந்த உலகிற்கு தத்துவமாக எடுத்துரைத்த வல்லுனர் ஒபாமா ஆவார்.
பராக் ஒபாமா (BARACK OBAMA), 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். (இப்போது இரண்டாம் முறை) அப்போது தனது உரை ஒன்றில் “மாற்றம் தேவை“ என்று உரையாற்றினார். அன்றுமுதல் இந்த பொன்மொழியும் ஊடகங்களில் கூடவே சேர்ந்து பிரபலமாயிற்று.
பராக் ஒபாமா, மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் இரண்டு மகள்கள் உட்பட பராக் ஒபாமாவின் குடும்பம் இன்றும் உலகில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் மற்றும் பிரபலமான அரசியல் குடும்பமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.