day, 00 month 0000

கேரளாவில் அமெரிக்கப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-இருவர் கைது

கேரளாவில் அமெரிக்கப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க பெண்ணான 44 வயதுடைய பெண் ஒருவர்,கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல் கொல்லம் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

குறித்த ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் ஜூலை 31ஆம் திகதி தனியாக தங்கியுள்ளார்.

இதன்போது,கடற்கரைக்கு வந்த இரண்டு சந்தேக நபர்களும் குறித்த அமெரிக்க பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து, இருச்சக்கர வண்டியில் கடத்திச்சென்று பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று கொல்லம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்