அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றின் குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 29 ஆம் திகதி குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மெல்போர்ன் நகரின் Keysborough பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு உடையணிந்து கூறிய ஆயுதங்களுடன் வருகைத்தந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் தமது காரை கொள்ளையிட்டுச் செல்லும் நோக்கிலே வருகைத்தந்துள்ளதாக சம்பவத்தை எதிர்கொண்ட இலங்கையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.