இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த 24 வயதான குர்விந்தர் நாத்.
மேற்படிப்புக்காக கனடா சென்ற இவர் பகுதி நேர பீட்சா டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார்.
ஜூலை 9 அன்று, உணவு ஆர்டர் செய்வோர் போர்வையில் மர்ம கும்பல் ஒன்று குர்விந்தர் நாத்தின் வாகனத்தை பறித்துச் சென்றது. தடுக்க முயன்ற குர்விந்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குர்விந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 தினங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான தகவல் பஞ்சாப்பிலிருக்கும் குர்விந்தர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
குர்விந்தர் கொலையான தகவல் அறிந்து, பஞ்சாப்பில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என சகலமானோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
குர்விந்தர் மீது பாசமாக இருக்கும் அவரது தாய் நரீந்தர் கௌர் வசம், மகன் இறந்த தகவலை தெரிவிக்காது தள்ளிப்போட்டு வந்தனர். அவர் அதை தாங்கமாட்டார் என்றே சொல்லாமல் இருந்தனர்.
ஆனால் குர்விந்தர் சடலம் சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்தனர்.
அப்போது தான் மகனின் இறப்பு குறித்து நரீந்தருக்கு தெரியவந்தது.
மகன் இறந்த விவரங்களை அறிந்ததும், அவரது தாய் நரீந்தர் கௌர் பேரதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தாய் - மகன் என இருவரின் உடல்களுக்கும் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.