பாகிஸ்தானில் பேரணியின்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் மாவட்டம் பஜூரின் தலைநகர் Khar புறநகரில், மதகுரு மற்றும் அரசியல் தலைவரின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் திடீரென பயங்கர குண்டு வெடித்தது.
இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் 10 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் அறிவித்ததையடுத்து பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்த குண்டு வெடிப்புக்கு யாரும் பொருப்பேற்கவிலலை எனவும் அறியமுடிகின்றது.
இதற்கிடையில் மனித வெடிகுண்டு மூலம் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொது மக்களும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கீழ் காணப்படும் காணொளியும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.